முகவரி கேட்பது போல் நாடகம்..12 வயசு சிறுமியை கடத்திய வடமாநில கும்பல் - பதறவைக்கும் பகீர் பின்னணி

x

திருச்சி மாவட்டத்தில் வட மாநில கும்பலால் கடத்தப்பட்ட 12 வயது சிறுமி கடத்தல் கும்பலிடம் இருந்து தப்பிவந்த நிலையில், சிறுமியின் பெற்றோர் போலீசில் புகாரளித்துள்ளனர்.

திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமியை, வடமாநில கும்பல் ஒன்று முகவரி கேட்பது போல் பேச்சுக்கொடுத்து கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இதில், சத்திரம் பேருந்துநிலையம் அருகே சென்ற கும்பல் காரை நிறுத்தியதாகவும், அப்போது கடத்தல் கும்பலிடம் இருந்து சிறுமி தப்பி வந்ததாகவும் பெற்றோரிடம் தெரிவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் போலீசில் புகாரளித்த நிலையில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வரும் போலீசார், வடமாநிலத்தை சேர்ந்த ஒரு பெண் உட்பட மூவரை தேடி வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்