"டார்ச்சர் செய்து இழுத்துட்டு போறாங்க.." முன்னாள் IPS அதிகாரியின் மருமகள் கைது - வழக்கறிஞர் பேட்டி

x

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி திலகவதியின் மருமகளை, போலீசார் கைது செய்து அழைத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழக முன்னாள் டிஜிபியாக இருந்த திலகவதியின் மகன் பிரபு திலக்.

இவருக்கும் சேலத்தை சேர்ந்த ஸ்ருதி என்ற பெண்ணுக்கும் கடந்த 2007ல் திருமணம் நடந்த நிலையில் அவர்களுக்கு 2 பிள்ளைகளும் உள்ளனர்.

தனது கணவர் வேறொரு பெண்ணுடன் திருமணம் தாண்டிய உறவில் இருப்பதாகவும், அதற்கு மாமியார் திலகவதியும் உடந்தையாக இருப்பதாகவும் கூறி, ஏற்கனவே சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ஸ்ருதி புகார் அளித்திருந்தார்.

இதனிடையே, கடந்த 25ம் தேதி, திருமங்கலத்தில் உள்ள வணிக வளாகத்தில், கணவருடன் சென்ற அந்தப் பெண்ணுக்கும், ஸ்ருதிக்கும் இடையே தகராறு நடந்ததாக கூறப்படுகிறது.

இதில் இருதரப்பினரும் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.

இந்த நிலையில், கே.கே. நகர் வீட்டில் இருந்த ஸ்ருதியை, விசாரணை என்ற பெயரில் போலீசார் கைது செய்து திருமங்கலம் காவல்நிலையம் அழைத்துச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

எந்த ஒரு விசாரணையும் நடத்தாமல், வீட்டில் குழந்தைகளுடன் இருந்த பெண்ணை, விசாரணை என்ற பெயரில் போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்துள்ளதாக ஸ்ருதியின் வழக்கறிஞர் குற்றம்சாட்டியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்