டபுள் மீனிங்.. ஆபாச பேச்சு.. அத்துமீறல்.. சிக்கினார் கல்லூரி தாளாளர்
கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக தென்காசியில் இயங்கிவரும் தனியார் பாராமெடிக்கல் கல்லூரி தாளாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தென்காசியில் இயங்கிவரும் தனியார் பாராமெடிக்கல் கல்லூரியில் பாவூர்சத்திரத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். அந்த மாணவியிடம் கல்லூரி தாளாளர் முகமது அன்சாரி ஆபாசமாக இரட்டை அர்த்தத்துடன் பேசியதாக கூறப்படுகிறது. மேலும் அவரை தொட முயன்றதாகவும் தெரிய வந்துள்ளது. இது குறித்த பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் தாளாளர் முகமது அன்சாரியை போலீசார் கைது செய்தனர்.
Next Story
