ரூல்ஸ் பற்றி நீங்க பேசாதீங்க...உங்க புள்ளைகள இங்கு படிக்க வைப்பீங்களா? கோவப்பட்ட அமைச்சர் மெய்யநாதன்

x

அறந்தாங்கி அருகே பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் மெய்யநாதன், பள்ளியில் போதிய வசதிகள் இல்லாதது குறித்து அதிகாரிகளை சாடினார். புதுக்கோட்டை மாவட்டம் ஆவணத்தான்கோட்டை கிழக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைபள்ளியில், பேவர் பிளாக் சாலை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்று அடிக்கல் நாட்டிய அமைச்சர் மெய்யநாதன், பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பள்ளியில் போதிய கட்டிட வசதிகள் இல்லாதது குறித்தும், கட்டிடங்கள் பாரமரிக்கப்படாதது குறித்தும் அதிருப்தியடைந்த அவர், உங்கள் பிள்ளைகளை இங்கு படிக்க வைப்பீர்களா என அதிகாரிகளை சாடினார். தொடர்ந்து கட்டிட வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க ஆணையிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்