"கூடவே கூடாது; உடனே ரத்து செய்யுங்கள்.." - CM சித்தராமையா போட்ட அதிரடி உத்தரவு | Karnataka

x

கர்நாடகாவின் முதல்வராக பொறுப்பேற்றுள்ள சித்தராமையா, தான் செல்லும் வழித்தடங்களில் ஜீரோ டிராபிக்கை செயல்படுத்தக் கூடாது என போக்குவரத்து காவல்துறைக்கு அதிரடி உத்தரவை பிறப்பித்திருப்பது மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

பொதுவாக முதல்வர்கள் மற்றும் அமைச்சர்களின் வாகனங்கள் சாலைகளில் செல்லும் போது பொது வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு ஜீரோ டிராபிக் மூலம் விரைந்து செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதனால் மக்களுக்கு கால தாமதம் ஏற்படும். இந்நிலையில், சித்தராமையா, தனது பயணத்தால் பொது மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படக் கூடாது என்று கூறி, ஜீ ரோ டிராஃபிக் சலுகையை ரத்து செய்யுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதேபோல் நிகழ்ச்சிகளில் தனக்கு பூங்கொத்து மற்றும் சால்வைகள் வழங்குவதை தவிர்க்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ள சித்ராமையா, அதற்கு பதிலாக புத்தகங்களை வழங்குங்கள் என வலியுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்