"தேசிய பாதுகாப்பு தகவல்களை புறக்கணிக்க கூடாது" - மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்

தேசிய பாதுகாப்பு செயலகம் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் வழங்கும் தகவல்களை புறக்கணிக்காமல், தீவிர கவனம் செலுத்த வேண்டும் என மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

பிரதமர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் மற்றும் அனைத்து துறை சார்ந்த செயலாளர்கள் பங்கேற்றனர். அப்பொழுது பேசிய பிரதமர், தேசிய பாதுகாப்பு செயலகம் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் வழங்கும் தகவல்களை புறக்கணிக்க கூடாது என கூறியுள்ளார். துறை சார்ந்த எந்த ஒரு கொள்கையை வகுப்பதாக இருந்தாலும் இந்தியாவின் பாதுகாப்பு திறம் சார்ந்த கண்ணோட்டத்தில் பரிசீலிக்க வேண்டும் என்ற அவர், ஒரு சில விவகாரங்களில் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் குறிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பதில்லை என்பதை சுட்டிக்காட்டினார்.

X

Thanthi TV
www.thanthitv.com