பளபளன்னு வாசனை இல்லைனா வாங்காதீங்க... குப்பையில் மாம்பழங்கள்...

x

கோவையில் ரசாயன கொண்டு பழுக்க வைக்கப்பட்ட 25 ஆயிரம் கிலோ எடை கொண்ட மாம்பழம் மற்றும் சாத்துக்குடிகளை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கோவை மாநகரில் உள்ள வைசியால் வீதி, பெரிய கடைவீதி, பவள வீதிகள், கருப்பன வீதி, முத்து விநாயகர் கோவில் வீதி, தர்மராஜா கோவில் வீதி, கெம்பட்டி காலனி ஆகிய பகுதிகளில் எட்டு குழுவாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொண்டனர். இந்த திடீர் கள ஆய்வின்போது, 45 கடைகள் மற்றும் குடோன்களில் சோதனை செய்யப்பட்டது. அதில் 16 கடை மற்றும் குடோன்களில் சிறிய ரசாயன பொட்டலங்களை ஒவ்வொரு பழ பெட்டிகளுக்குள் வைக்கப்பட்டுள்ளதை கண்டுபிடித்தனர். பழுக்க வைக்கப்பட்ட சுமார் 22 டன் எடை மாம்பழங்கள்,

இரண்டரை டன் எடை கொண்ட சாத்துகுடியும் என மொத்தம் 25 டன் பழங்களை பறிமுதல் செய்து குப்பை வண்டிகளில் அள்ளிச்சென்றனர். இவற்றின் சந்தை மதிப்பு சுமார் 12 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் என தெரிவித்த அதிகாரிகள், 16 கடைகள் மற்றும் குடோன்களுக்கு நோட்டீஸ் வழங்கினர்.


Next Story

மேலும் செய்திகள்