"ஸ்மார்ட்போன் வாங்கி கொடுக்காதீர்கள்".. Redmi இந்தியா முன்னாள் CEO எச்சரிக்கை

x

ஸ்மார்ட்போன் பயன்பாடுகளின் கேடுகள் பற்றி சியோமி நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கவலை தெரிவித்துள்ளார். இதன் பின்னணி பற்றி இந்த தொகுப்பு அலசுகிறது.

அன்றாட வாழ்க்கையில் ஸ்மார்ட்போன்கள் பல்வேறு வகைகளில் பெரும் பயன்களை அளிக்கின்றன. ஆனால் இவற்றை இளம் சிறுவர்கள், சிறுமியர்களுக்கு அளிக்கும் போக்கு வெகுவாக அதிகரித்து வருகிறது.

சியோமி இந்தியா என்ற பிரபல ஸ்மார்ட்போன்கள் உற்பத்தி நிறுவனத்தின் முன்னாள் தலைவரான மனு குமார் ஜெயின், இதன் பாதகங்கள் பற்றி எச்சரிக்கை விடுத்துள்ளார். உங்களின் பிள்ளைகளுக்கு ஸ்மார்ட்போன்களை வாங்கிக் கொடுக்காதீர்கள் என்ற தலைப்பில் லிங்கிடின் தளத்தில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.

இதில் இளம் வயதில் ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட் ரக கம்யூட்டர்களை அதிக நேரம் பயன்படுத்துவதால், பின்னாட்களில் ஏற்படும் விளைவுகள் பற்றி விவரித்துள்ளார். சாப்பியன் லேப் என்ற ஆய்வு மையம் இதைப் பற்றி வெளியிட்ட ஆய்வு முடிவுகளை குறிப்பிட்டுள்ளார்.

10 வயதிற்கு முன்பு ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்த தொடங்கும் சிறுமிகள், வளர்ந்து ஆளான பின், இவர்களில் 60 முதல் 70 சதவீதத்தினருக்கு மனநோய் பாதிப்பு ஏற்படுவதாக இந்த ஆய்வு கூறுகிறது.

குழந்தைகள் அழுவதை கட்டுப்படுத்தவும், உணவு உண்ணச் செய்யவும், வாகனங்களில் பயணம் செய்யும் போதும், ஸ்மார்ட்போன்களை அவர்களுக்கு கொடுக்கும் வழக்கத்தை நிறுத்த வேண்டும் என்கிறார் மனு குமார் ஜெயின்.

இதற்கு பதிலாக ஆரோக்கியமான பொழுதுபோக்குகள், மைதான விளையாட்டுகள், வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடுவதை ஊக்குவிக்க வேண்டும் என்கிறார்.


Next Story

மேலும் செய்திகள்