ஹெலிகாப்டரை முந்திய கழுதைகள் - கோடி கோடியாக கொட்டிய பணம்

x

உத்தரகண்ட் மாநிலத்தில் இந்த ஆண்டு புனிதப் பயணத்தின்போது, ஹெலிகாப்டர் நிறுவனங்களைவிட கழுதை உரிமையாளர்கள் அதிக வருவாய் ஈட்டியுள்ளனர்.

உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத்துக்கு புனித யாத்திரை மேற்கொள்பவர்கள், மலையேற்றத்துக்கு ஹெலிகாப்டர்கள் அல்லது கழுதைகள் அல்லது பல்லக்கை பயன்படுத்தி வருகிறார்கள். இந்த ஆண்டு மொத்தம் 15 லட்சம் பேர் புனிதப்பயணம் மேற்கொண்டனர். அவர்களில், 5.3 லட்சம் பேர் மலையேற்றத்துக்கு கழுதைகளைப் பயன்படுத்தினார்கள். இதன்மூலம், கழுதைகளின் உரிமையாளர்களுக்கு 101 புள்ளி 3 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. அதேநேரம் ஹெலிகாப்டர் நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு 75 கோடி ரூபாய் மட்டுமே கிடைத்துள்ளது.

அதைவிட குறைவாக, பல்லக்கு உரிமையாளர்களுக்கு 86 லட்ச ரூபாய் வருமான் கிடைத்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்