வீடியோ காலில் பேசிய நாய் நண்பர்கள்... இணையத்தில் வைரலாகும் இணைந்த கைகள்...

x

ஒரு காலத்துல நம்ம பிரண்ட பாக்கனும் நெனச்சா... ஒடனே அவன் வீட்டு கதவை தட்டி... ஏய் வாடா மச்சா எப்டி இருக்கனு... பேச்சு குடுத்து விசாரிக்க ஆரம்பிச்சுடுவோம்... அதுகப்புறம் டெலிஃபோன், செல் போன், ஸ்மார்ட் போன்லாம் வந்ததும்... பக்கத்து வீடு பிரண்டுலாம் என்னமோ பாக்கிஸ்தான்ல இருக்குற மாதிரி... போன் போட்டு வீடியோ கால்ல பேசுற நிலமை வந்துடுச்சு... அந்த அளவுக்கு நம்ம பாசமான நட்பை இந்த டெக்னாலஜி உலகம் பிரிச்சுடுச்சுனே சொல்லலாம்... இதை ஏன் இங்க சொல்றேன்னா... இந்த கொடுமை நமக்கு மட்டும் நடக்கலங்க... இணை பிரியா நண்பர்களா இருந்த ரெண்டு நாய்களுக்கும் நடந்துருக்கு...

நட்புக்காக படத்துல வர பிரண்ட்ஸ் மாதிரி... நட்புக்கு பெரிய இலக்கனமா இருந்தவங்க தான்... இந்த ரெண்டு நாய்களும்... பட் சோகம் என்னனா... இந்த நாய்களோட முதலாளிங்க ரெண்டு பேரையும் பிரிச்சு வேற ஊருக்கு கூட்டிடு கிளம்புனதுனால... பிரிஞ்சு போன நாய்கள்... நம்ம மறுபடியும் மீட் பண்ன முடியாதா.... பேச முடியாதானு ஏங்கி கிடந்துருக்குங்க... சரி இதுங்களோட பிரச்சனைய தீர்த்து வைக்கலாம்னு முடிவு பண்ன இதோட முதலாளிங்க... இதுங்க ரெண்டுத்தையும் வீடியோ கால் மூலமா பேச வச்சுருக்காங்க...

வீடியோல ரெண்டு பேரும்... ஒருத்தர ஒருத்தர் பாத்ததும்... மாறி மாறி... குமுறி குமுறி அழ ஆரம்பிச்சுடுச்சுங்க...

இதுங்களோட இந்த பாசபினைப்பு வீடியோ தான் இப்போ இன்ஸ்டாகிராம்ல தீயா பரவிட்டு இருக்கு...


Next Story

மேலும் செய்திகள்