நாய் வளர்ப்பில் ஏற்பட்ட தகராறு - உச்சகட்ட மோதலில் கத்திக் குத்து-கல்பாக்கத்தில் பரபரப்பு

x

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் வசித்து வரும் பீகார் மாநிலத்தை சேர்ந்த ரித்தேஷ் ரஞ்சன், தனது வீட்டில் இரண்டு உயர்ரக நாய்களை வளர்த்து வந்துள்ளார்.

வளர்ப்பு நாய்களால் குடியிருப்பு வளாகத்தில் சுகாதார சீர்க்கேடு ஏற்படுவதாக கூறி, அங்கு வசிப்போர் ரித்தேஷிடம் முறையிட்டுள்ளனர்.

அதற்கு ரித்தேஷ் தகராறில் ஈடுபட்டதுடன், அவதூறு வார்த்தைகளை பேசியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, குடியிருப்பு வாசிகள், ரித்தேஷ் வேலைப்பார்க்கும் அணுமின் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அதனால் ஆத்திரமடைந்த ரித்தேஷ், தன் மீது புகார் அளித்த முத்துகுமாரிடம் தகராறு செய்துள்ளார்.

அப்போது ஏற்பட்ட கைகலப்பில் தன்னிடம் இருந்த கத்தியால், முத்துகுமாரின் மார்பு மற்றும் முழங்காலில் ரித்தேஷ் குத்தியுள்ளார்.

அதில் காயமடைந்த முத்துகுமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார் கத்தியால் குத்திய ரித்தேஷை கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்