"ரூ.2000 நோட்டுகளை மாற்ற ஆவணங்கள் தேவையில்லை.." - SBI அறிவிப்புக்கு எதிராக வழக்கு

x

2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்ற பொதுமக்கள் எவ்வித அடையாள சான்றையும் சமர்ப்பிக்க தேவையில்லை என்ற பாரத ஸ்டேட் வங்கி அறிவிப்புக்கு எதிரான ரிட் மனு மீதான உத்தரவை டெல்லி உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தது.

பாரத ஸ்டேட் வங்கியின் அறிவிப்பு தன்னிச்சையானது, நியாயமற்றது, சமத்துவ உரிமைக்கு எதிரானது, என அறிவிக்க வேண்டும் என மனுதாரர் வாதிட்டார். பொருளாதாரக் கொள்கை சார் விவகாரங்களில் நீதிமன்றங்கள் தலையிடக்கூடாது என்ற தீர்ப்பை சுட்டிக்காட்டிய மத்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதால் இந்த மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட டெல்லி உயர்நீதிமன்றம், ரிட் மனு மீதான உத்தரவை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தது.


Next Story

மேலும் செய்திகள்