இங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும் மேகன் குறித்த ஆவணத் தொடர்

x

இங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும் மேகன் மெர்க்கல் குறித்த ஆவணத் தொடரின் இரண்டாவது டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. ஹாரி மற்றும் மேகன் என பெயரிடப்பட்ட ஆவண தொடரை ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் தயாரித்துள்ளது. இதில், இளவரசர் ஹாரி மற்றும் மேகன் இடையேயான காதல், அவர்களுக்கும் அரச குடும்பத்திற்கும் ஏற்பட்ட அனுபவங்கள் இடம் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது சகோத‌ர‌ர் இளவரசர் வில்லியமை பாதுகாப்பதற்காக இங்கிலாந்து அரச குடும்பம் பொய் சொல்ல தயாராக இருப்பதாக டிரைலரில் ஹாரி கூறுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்