மூக்கில் அறுவை சிகிச்சைக்கு மயக்க ஊசி செலுத்திய மருத்துவர்கள் - அடுத்து நடந்த அதிர்ச்சி

x

கடலூரில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நபர் உயிரிழந்த விவகாரத்தில் தனியார் மருத்துவமனையை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த கோவிந்தராஜ், மூக்கில் வளர்ந்துள்ள சதையை அறுவை சிகிச்சை செய்வதற்காக கடலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அப்போது, மருத்துவர்கள் அளித்த மயக்க ஊசியால் கோவிந்தராஜின் உடல் நிலை மிகவும் மோசமானதாக கூறப்படுகிறது.

உடனே மருத்துவர்கள் அருகில் உள்ள மற்றொரு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல பரிந்துரைத்துள்ளனர்.

ஆனால், அந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலே கோவிந்த ராஜ் உயிரிழந்தார்.

இதையடுத்து, தனியார் மருத்துவமனை மருத்துவர்களின் கவனக்குறைவே உயிரிழப்பிற்கு காரணம் என கோவிந்தராஜின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதனால், முன்னெச்சரிக்கையாக மருத்துவமனை வளாகத்தை சுற்றி பாதுகாப்பிற்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்