சிகிச்சைக்கு சென்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டாக்டர்.. போலீஸ் எடுத்த அதிரடி ஆக்‌ஷன்

x

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே, சிகிச்சைக்கு சென்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, மருத்துவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆற்றிங்கல் பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர், காது வலி காரணமாக, வர்க்கலா பகுதியில் உள்ள மருத்துவர் சுரேஷ்குமார் என்பவரை அணுகிய போது, பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வர்க்கலா காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். அதன் பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவான மருத்துவர் சுரேஷ்குமாரை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்