உலகிலேயே கம்மியான அலைபேசி டேட்டா கட்டணம் கொண்டிருக்கும் நாடு எது தெரியுமா..? | Internet | India

x

உலக அளவில் மிக மலிவான அலைபேசி டேட்டா கட்டணங்கள் கொண்ட நாடுகள் வரிசையில் இந்தியா, ஐந்தாம் இடத்தில் உள்ளது.

உலகிலேயே மிக மலிவான டேட்டா கட்டணம் கொண்ட நாடாக இஸ்ரேல் உள்ளது. இங்கு ஒரு ஜி.பி டேட்டா கட்டணம் 3.26 ரூபாய் மட்டுமே.

இரண்டாம் இடத்தில் உள்ள இத்தாலியில் ஒரு ஜி.பி கட்டணம் 9.79 ரூபாயாகவும், மூன்றாம் இடத்தில் உள்ள சான் மரினோவில் 11.42 ரூபாயாகவும் உள்ளன.

நான்காம் இடத்தில் ஒரு ஜி.பி கட்டணமாக12.24 ரூபாயுடன் ஃபிஜியும், ஐந்தாம் இடத்தில் ஒரு ஜி.பி கட்டணமாக13.87 ரூபாயுடன் இந்தியாவும் உள்ளன

ஒரு ஜி.பி டேட்டா கட்டணம் 3 ஆயிரத்து 352 ரூபாயுடன் உலகிலேயே மிக அதிக டேட்டா கட்டணம் கொண்ட நாடாக செயின்ட் ஹெலினா என்ற தீவு நாடு உள்ளது.

சிறிய தீவு நாடுகளிலும், ஆப்பிரிக்க நாடுகளிலும் டேட்டா கட்டணங்கள் மிக அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்