"இது எவ்ளோ பெரிய அவமானம் தெரியுமா..?" - அமைச்சர் அன்பில் மகேஷிடம் வசமாய் சிக்கிய மாணவர்கள்

x

"இது எவ்ளோ பெரிய அவமானம் தெரியுமா..?" - அமைச்சர் அன்பில் மகேஷிடம் வசமாய் சிக்கிய மாணவர்கள்


சென்னை நங்கநல்லூரில் உள்ள ஒரு பள்ளியில், ஆய்வுக்கு சென்ற அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாணவர்கள் தாமதமாக பள்ளிக்கு வந்தால் அவர்களை உள்ளே காத்திருக்க செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

நங்கநல்லூர் பகுதியில் நேரு அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் சென்னை மாநகராட்சி பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது, அங்கிருந்த மாணவர்களுடன் அவர் கலந்துரையாடினார். அப்போது தாமதமாக வந்த மாணவர்கள் பள்ளிக்கு வெளியே நிற்க வைக்கப்பட்டு இருந்தனர். அவர்களை அழைத்துக் கொண்டு உள்ளே சென்ற அமைச்சர் 'தாமதமாக பள்ளிக்கு வந்தாலும் பள்ளிக்கு உள்ளே காத்திருக்க செய்ய வேண்டும் என ஆசிரியர்களிடம் அறிவுறுத்தினார். பின்னர் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சார்பாக மாணவர்களுக்கு பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிரான துணி பைகளை அவர் வழங்கினார்.


Next Story

மேலும் செய்திகள்