"தெரியாத எண்களிலிருந்து வரும் அழைப்புகளை ஏற்க கூடாது" - விஞ்ஞானிகளுக்கு DRDO அறிவுறுத்தல்

x

தெரியாத எண்களிலிருந்து வரும் அழைப்புகளை ஏற்க கூடாது என டீஆர்டீஓ நிறுவனம், தனது விஞ்ஞானிகளை அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானி பிரதீப் குருல்கர், நாட்டின் பாதுகாப்பு தொடர்பான முக்கிய தகவல்களை பாகிஸ்தான் உளவுத்துறையிடம் பகிர்ந்ததாக, மகாராஷ்டிராவின் பயங்கரவாத தடுப்பு பிரிவால் கைது செய்யப்பட்டார். ஹானி ட்ராப்பில் சிக்கி அவர் தகவல்களை பகிர்ந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், தெரியாத எண்களிலிருந்து வரும் செல்போன் அழைப்புகளை ஏற்க கூடாது எனவும், சமூக வலைதளங்களை தவிர்க்க வேண்டுமெனவும் தனது விஞ்ஞானிகளை அறிவுறுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்