த.வா.க கவுன்சிலரை ஒருமையில் திட்டிய திமுக பெண் கவுன்சிலர்.. பரபரப்பு காட்சிகள்

x
  • கடலூர் மாவட்டம், மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் கவுன்சிலர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
  • கூட்டத்தில், வார்டு சபை கூட்டம் நடத்தியதற்காக 2 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய், பொது நிதியிலிருந்து செலவு செய்ததாக கணக்கு காட்டப்பட்டது.
  • அதற்கு எதிர்ப்பு தெரிவித்த விசிக கவுன்சிலர் முகமது இத்ரீஸ், கூட்டம் நடத்த தாங்கள் செலவு செய்ததாக கூறினார்.
  • இதுதொடர்பாக உறுப்பினர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கவுன்சிலர் முத்துகிருஷ்ணனை, திமுக பெண் கவுன்சிலர் மோகன வள்ளி ஒருமையில் தரக்குறைவாக பேசியதை அடுத்து, கூட்டத்தை புறக்கணித்து வெளியேறி கவுன்சிலர்கள், போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்