திமுக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் மருத்துவமனையில் அனுமதி

x

திராவிட இயக்க சிந்தனையாளரும், பேச்சாளருமான நாஞ்சில் சம்பத், உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் மணக்காவிளை பகுதியைச் சேர்ந்த இவர், வலிப்பு , ஞாபக மறதி உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு சிகிச்சை பெற்று வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில், சென்னையில் இருந்து ரயில் மூலம் நாகர்கோவில் வந்த அவர், சுயநினைவை இழந்ததால், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.


Next Story

மேலும் செய்திகள்