காதல் திருமணம் செய்ததால் ஒரு குடும்பத்தையே ஊரைவிட்டு ஒதுக்கிவைத்த திமுக பிரமுகர்

x

காதல் திருமணம் செய்து கொண்ட குடும்பத்தாரை, திமுக ஒன்றிய செயலாளர் ஊரை விட்டு தள்ளி வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், தொகரப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ் மகன் கோபி என்பவர் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், திமுக ஒன்றிய செயலாளரான அறிஞர் என்பவர், காதல் திருமணம் செய்து கொண்ட அக்குடும்பத்தாரை ஊரை விட்டு தள்ளி வைப்பதாகக் கூறியுள்ளார்.

மேலும், 25 ஆயிரம் ரூபாய் பணம் கட்டினால் மட்டுமே ஊரில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளிலும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவீர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

ஆனால், நாகராஜ் குடும்பத்தினர், பணம் கட்ட மறுத்துள்ளனர். இதனிடையே கடந்த மாதம் 19-ஆம் தேதி, நாகராஜின் தாயார் வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தார்.

அவரின் இறுதிச் சடங்கிற்கு ஊர் மக்கள் யாரும் செல்லக் கூடாது எனவும், மீறி சென்றால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிஞர் மிரட்டியுள்ளார்.

இதனால், ஊர் மக்கள் யாரும் அவரது இறுதிச் சடங்கிற்கு செல்லவில்லை. இதே போன்று பல குடும்பத்தினரை ஊரை விட்டு தள்ளி வைத்து பணம் வசூலிப்பதாக திமுக ஒன்றிய செயலாளர் மீது ஊர் மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்