மாவட்ட செயலாளர்களுக்கு திமுக தலைமை முக்கிய உத்தரவு |

மாவட்ட செயலாளர்களுக்கு திமுக தலைமை முக்கிய உத்தரவு | DMK | District Secretaries | Chennai

ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் முகவரைத் தேர்வு செய்து பட்டியலை அனுப்பி வைக்குமாறு அனைத்து மாவட்டச் செயலாளர்களுக்கும் திமுக தலைமை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து கட்சித் தலைமை வெளியிட்ட உத்தரவில், திமுக மாவட்டச் செயலாளர்கள் தங்கள் மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் உள்ள ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் வாக்குச்சாவடி முகவர் பட்டியலை தயார் செய்து வரும் 10-ஆம் தேதிக்குள் தலைமைக் கழகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடி முகவர், சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடியில் குடியிருப்பவராகவும், வாக்குச்சாவடி குறித்து முழுமையாகத் தெரிந்தவராகவும் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com