நடனமாடியபடியே மேடையில் உயிரிழந்த மாஜி. ராணுவ வீரர் - கைதட்டி ரசித்த சோகம்..

நடனமாடியபடியே மேடையில் உயிரிழந்த மாஜி. ராணுவ வீரர் - கைதட்டி ரசித்த சோகம்..
Published on

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில், மேடையில் ஆடிக்கொண்டிருந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர், பாதியிலேயே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சோக சம்பவம் அரங்கேறியுள்ளது. யோகா மைய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஓய்வு பெற்ற ராணுவ வீரர் பல்விந்தர் சிங் சாப்ரா, மூவர்ணக்கொடி கையில் பிடித்தவாறு மேடையில் பாடலுடன், ஆடி மகிழ்ந்தார். ஆனால் சற்று நேரத்திலேயே அவர் மயங்கி விழுந்துள்ளார். பல்விந்தர் சிங் மயங்கி விழுந்ததும் நிகழ்ச்சியின் ஒரு பகுதி என நினைத்து அங்கிருந்தவர்கள் கைத்தட்டி உற்சாகப்படுத்தியுள்ளனர். ஆனால் பாடல் முடிந்து பிறகும் அவர் எழுந்திருக்காத நிலையில், அவர் சுயநினைவை இழந்தது தெரிய வந்தது. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com