"மாமூல் கொடு.." - பட்டாசு கடையில் கத்தியை காட்டி மிரட்டிய ரவுடிகள்

x

சென்னை அமைந்தகரையில், பட்டாசு கடையில் மாமூல் கேட்ட 3 ரவுடிகளை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அமைந்தகரை பகுதிகளில் உள்ள கடைகளில், பிரகாஷ், நீலேஷ்குமார், சென்ட்ரல் ராஜா என்கிற வினோத் ராஜா ஆகிய 3 பேர், கத்தியை காட்டி மிரட்டி மாமூல் வசூலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து புகாரின் பேரில் 3 பேரும் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்