நடுரோட்டில் ஜம்முன்னு உட்கார்ந்து ஒரே கல்ப்பாக அடித்த பலே பாட்டி

x

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக் மதுபானக் கடைகளில் மதுப் பிரியர்கள் குவிந்தனர்.

தீபாவளியைக் கொண்டாட கடந்த ஒரு வாரமாகவே பொதுமக்கள் புத்தாடைகளை வாங்குவதற்கும், பட்டாசு வாங்குவதற்கு கூட்டம் கூட்டமாக சென்றனர்.

மது பிரியர்களோ மதுபானக் கடைகளுக்கு படையெடுத்து உள்ளனர்.

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில், பகல் 12 மணி வரை காத்திருந்த மது பிரியர்கள், கடை திறந்தவுடன் முண்டியடித்துக் கொண்டுச் சென்று தங்களுக்கு விருப்பமான மதுபானங்களை வாங்கிச் சென்றனர்.

கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு அதிக அளவில் மதுபானங்களை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்துள்ள டாஸ்மாக் நிர்வாகம், மதுபானக் கடைகளில் கூடுதலாக இருப்பு வைத்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்