தீபாவளிக்கு வெளியூர் செல்வோர் கவனத்திற்கு! - வெளியான முக்கிய தகவல்

x

தீபாவளிக்கு முன்தினம் சொந்த ஊருக்கு செல்ல விரும்புவோர் இன்று அரசு விரைவு பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என போக்குவரத்து துறை தகவல் தெரிவித்துள்ளது.

தீபாவளி பண்டிகை, வார விடுமுறை நாட்களோடு சேர்ந்து பெரும்பாலானோர் அக்டோபர் 21ம் தேதி முதல் தங்களது சொந்த ஊருக்குப் புறப்பட உள்ளனர். வெள்ளிக்கிழமையான 21ம் தேதி பயணிப்போருக்கான முன்பதிவு நேற்று முன்தினம் தொடங்கியது. இதையடுத்து தீபாவளிக்கு முன்தினம் புறப்பட்டுச் செல்லும் சூழ்நிலையில் இருப்போர் இன்று முதல் பஸ் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். மேலும் tnstc.in என்ற இணையதளம், tnstc செயலி மற்றும் முன்பதிவு மையங்கள் வாயிலாக பயணச்சீட்டை முன்பதிவு செய்து பயணிக்கலாம் என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்