தீபாவளி பண்டிகை - சென்னை காவல்துறை முக்கிய தகவல்

x

தீபாவளி பண்டிகை - சென்னை காவல்துறை முக்கிய தகவல்

தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னையில் 18,000 போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருவதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசுகள் மற்றும் புத்தாடைகள் வாங்க அதிகளவு மக்கள் கூடும் இடங்களான புரசைவாக்கம், தி.நகர், பூக்கடை, வண்ணாரப்பேட்டை ஆகிய இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 16 தற்காலிக கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு பைனாகுலர் மூலமாக சுழற்சி முறையில் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

தி.நகர் பகுதியில் 6 இடங்களில் சிறப்பு கேமராக்கள் பொருத்தி அதன் மூலம் நடப்பு நிகழ்ச்சிகளை face recognition தொழில் நுட்பம் மூலமாக கண்காணித்து, பழைய குற்றவாளிகள் கூட்டத்தில் இருந்தால் உடனடியாக கண்டுபிடிக்கும் புதிய முறை கையாளப்படுகிறது. தி.நகர் பகுதியில் 4 இடங்களில் 11 தற்காலிக கட்டுப்பாட்டு அறை அமைத்து சிசிடிவிக்களை போலீசார் கண்காணித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்