தீபாவளி நாளில் கார்கில் எல்லையில் ராணுவ வீரர்களுடன் VIBE செய்த பிரதமர் - வைரல் வீடியோ..

x

தீபாவளி நாளில் கார்கில் எல்லையில் ராணுவ வீரர்களுடன் VIBE செய்த பிரதமர் - வைரல் வீடியோ..!

பிரதமர் மோடி கார்கிலில் உள்ள ராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடி மகிழ்ந்தார்.

2014ம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததில் இருந்து ராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடுவதை பிரதமர் மோடி வழக்கமாக இருந்து வருகிறார். அந்த வகையில், இன்று கார்கிலுக்கு சென்ற அவர், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்தார். அப்பொழுது வீரர்கள் முன்னிலையில் உரையாற்றிய அவர், போர் வெற்றி கொண்ட கார்கில் மண்ணில் இருந்து நாட்டு மக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்து கொள்வதாக பெருமையுடன் கூறினார். நாட்டை காக்கும் ராணுவ வீரர்களே தனது குடும்பம் என்ற பிரதமர், துணிச்சலான வீரகளுடன் இணைந்து கார்கில் மண்ணில் தீபாவளியை கொண்டாடுவதில் மகிழ்வதாக நெகிழ்ச்சியுடன் கூறினார். மேலும், எல்லையை காக்கும் ராணுவ வீரர்களால், நாட்டில் மக்கள் அமைதியாக உறங்க முடிவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்