"அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்படவில்லை" - சிஐடியு மாநில தலைவர் சவுந்தரராஜன் பேட்டி

x

"அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்படவில்லை" -

சிஐடியு மாநில தலைவர் சவுந்தரராஜன் பேட்டி

அரசு மற்றும் அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, இதுவரை தீபாவளி போனஸ் அறிவிக்கப்படவில்லை என சிஐடியு மாநில தலைவர் சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் சிஐடியு மாநில நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது. இதில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், சிஐடியு மாநில தலைவருமான சவுந்தரராஜன் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சிக்குப் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், தீபாவளி பண்டிகைக்கு மிக குறைந்த நாட்களே உள்ளதாகவும், ஆனால், இதுவரை அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு வெளியாகவில்லை எனவும் கூறினார்.

மேலும், கடந்த ஆட்சியில் போக்குவரத்து, ஆவின் நிறுவன ஊழியர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்கியது போல், இந்தாண்டும் வழங்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்