ராகுல் காந்தி தகுதி நீக்க விவகாரம்... மவுன சத்தியாகிரக போராட்டம் ரத்து

x

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை விதிக்கப்பட்டது. இதனை ரத்து செய்ய குஜராத் உயர்நீதிமன்றம் மறுத்து மனுவை தள்ளுபடி செய்த நிலையில் இந்தியா முழுவதும் மவுன போராட்டம் புதன்கிழமையன்று நடத்தப்படும் என காங்கிரஸ் கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த போராட்டம் அனைத்து மாநில தலைநகரங்களிலும் உள்ள காந்தி சிலை முன்பு நடைபெற உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டது. கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட டெல்லி, ஹரியானா, பஞ்சாப் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் திட்டமிடப்பட்ட போராட்டத்தை காங்கிரஸ் ரத்து செய்துள்ளது. அந்த மாநிலங்களில் ஜூலை 16ஆம் தேதி நடைபெறும் என காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்