எம்.பி தகுதி நீக்கம்.. அமெரிக்காவில் மௌனம் கலைத்தார் ராகுல் காந்தி

x

கலிபோர்னியாவில் உள்ள புகழ்பெற்ற ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் எம்.பி பதவி தகுதி நீக்கம் குறித்து மவுனம் கலைத்தார் ராகுல் காந்தி...

நாடாளுமன்றத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்டு அவதூறு குற்றத்திற்காக அதிகபட்ச தண்டனை விதிக்கப்பட்ட முதல் நபர் நான் தான் என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய போது தெரிவித்தார்... எவ்வாறாயினும் எம்.பி பதவியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், பாரத் ஜோடோ யாத்திரையைக் குறிப்பிட்டு நாடாளுமன்றத்தில் அமர்வதை விட, இறுதியாக மக்களுக்காக பணியாற்றும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி குறிப்பிட்டார். இந்த சூழலை சமாளிக்க வெளிநாடுகளின் உதவி தேவையா என கேள்வி கேட்கப்பட்ட போது, தான் யாரிடமும் ஆதரவை நாடவில்லை என்றும், "எங்கள் போராட்டம் எங்களுடைய போராட்டம் தான்" என்பதில் தெளிவாக இருப்பதாக கூறிய ராகுல், இந்தியாவைச் சேர்ந்த இளம் மாணவர்கள் இங்கு நிறைய பேர் உள்ளதாகவும், அவர்களைத் தொடர்பு கொள்வது தனது உரிமை எனவும் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்