தண்ணீரை பயன்படுத்தியதால் தகராறு...சரமாரியாக தாக்கி கொண்ட இரு கும்பல் - அதிர்ச்சி வீடியோ காட்சி

x

ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் அருகே இரு பிரிவினருக்கும் இடையே நிகழ்ந்த மோதலால் பரபரப்பு ஏற்பட்டது. சண்முகநாதபுரம் கிராமத்தில்,

ஒரே சமுதாயத்தை சேர்ந்த நபர்கள், இரு பிரிவுகளாக உள்ளனர். இந்நிலையில் கண்மாயில் உள்ள தண்ணீரை ஒரு தரப்பினர் எடுத்ததாக கூறி மற்றொரு பிரிவினர் ஊருக்குள் புகுந்து கம்புகளுடன் மோதி கொண்டனர். இதில் 10 - க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து 14 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இரு தரப்பினர் மோதிக்கொண்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்