திமுக கொடி கம்பம் அமைப்பதில் தகராறு...இரு தரப்பினரிடையே கடும் வாக்குவாதம் - சமூகவலைதளங்களில் பரவி வரும் வீடியோ

x

தென்காசி அருகே திமுக கொடி கம்பம் அமைப்பதில் தகராறு ஏற்பட்ட வீடியோ சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. தென்காசி மாவட்டம் கடையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் 45ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தென்காசி மாவட்ட தி.மு.க செயலாளர் சிவபத்மநாதன் தலலமையில் கொடியேற்று விழா நடைபெற்றது. அப்போது ராஜா என்பவர் தனது கடையின் முன்பு கொடி கம்பம் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதனால் திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்