தொழிற்சாலை சுற்று சுவரால் ஏற்பட்ட தகராறு - நில உரிமையாளரை கார் ஏற்றிக் கொல்ல முயற்சி

x

மதுராந்தகம் அருகே நிலத்தின் உரிமையாளரை தொழிற்சாலை உரிமையாளர் காரை ஏற்றிக் கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அச்சிறுபாக்கத்தை அடுத்த சீதாபுரம் கிராமத்தில், தனியார் குளிர்பான தொழிற்சாலைக்கு அருகில் உள்ள நிலத்தை ராஜவேலு என்பவர் விலைக்கு வாங்கியுள்ளார். ஆனால், அந்த இடத்தில் தொழிற்சாலை நிர்வாகம் சுற்றுச் சுவர் கட்டியிருந்ததால், அதனை ராஜவேலு இடிக்கச் சென்றார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், ராஜவேலுவை தொழிற்சாலை உரிமையாளர் காரை ஏற்றிக்கொல்ல முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கிருந்த பொதுமக்கள், தொழிற்சாலை உரிமையாளருடன் வாக்குவாதம் செய்து, அனுப்பி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்