தென்காசியில் 10ஆம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு

x

தென்காசி மாவட்டம் புலியூர் குளத்தில், 10ஆம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. கோடை காலம் என்பதால் குளத்தில் நீர்வற்றியதால் கல்வெட்டு வெளியே தெரிந்துள்ளது. இது குறித்து ஆய்வு செய்த தொல்லியல் ஆய்வாளர்கள், இது பாண்டிய பேரரசர் மூன்றாம் நரசிம்ம பாண்டியரின் 14 ஆம் ஆட்சி ஆண்டில் கிபி 914-ல் பொறிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். பொதுவாக வேளாண்மைக்காக ஏரி குளங்கள் வெட்டுவதும் நீர் மேலாண்மைக்காக அதில் தூம்பு அமைத்து அது பற்றிய செய்திகளை கல்லில் பதிப்பதும் பண்டைய காலத்தில் தமிழகத்தில் நடைமுறையில் இருந்து வந்ததாக தெரிகிறது. இதையொட்டி தான் இந்த கல்வெட்டு அமைக்கப்பட்டுள்ளது என இதில் பதிக்கப்பட்டுள்ள எழுத்துக்கள் கூறுகிறது.


Next Story

மேலும் செய்திகள்