"பஸ் ஒரு இன்ச் நகர கூடாது".. அரசு பேருந்தை "தனி ஒருவளாக" சிறைப்பிடித்த மாற்றுத்திறனாளி பெண்

விருத்தாச்சலம் பெரியார் நகரைச் சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி சௌந்தர்யா, நெய்வேலி டவுன் ஷிப்பில் பணிபுரிந்து வருகிறார். இலவச பயண அனுமதி அட்டை பெற்றுள்ள இவர், தினந்தோறும் அரசு பேருந்தில் பயணம் செய்து வருகிறார். இந்நிலையில், நெய்வேலி டவுன்ஷிப்பில் இருந்து மதுரை செல்லும் அரசு பேருந்தில் ஏறியபோது, அதன் நடத்துனர், இலவச பயண அனுமதி அட்டை விழுப்புரம் கோட்ட பேருந்துகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், மதுரை கோட்ட பேருந்துகளில் அனுமதி கிடையாது என்றும் கூறியுள்ளார்.இதையடுத்து, விருத்தாசலம் பேருந்து நிலையத்தில் தனது தந்தையுடன் சேர்ந்து, மதுரைக்கு செல்லும் பேருந்தில் போராட்டத்தில் ஈடுபட்டார். போலீசார், அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com