"கொட்டும் மழை காலம் உப்பு விக்க போனேன் காற்றடிக்கும் நேரம் மாவு விக்க போனேன்"- இயக்குனர் சீனு ராமசாமி

x

உள்ளூரில் ஓடாத மாமனிதன் படம், உலக அரங்கில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாக, இயக்குனர் சீனுராமசாமி தெரிவித்துள்ளார்.

வருகிற 20ம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை ரஷ்யாவில் மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழா நடைபெற உள்ளது.

இதில் சீனு ராமசாமியின் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகிய மாமனிதன் திரைப்படம் திரையிடப்பட உள்ளது.

இதனை முன்னிட்டு பாராட்டு விழா நிகழ்ச்சி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ரஷியன் மையத்தில் நடைபெற்றது.

இதில் அமைச்சர் சாமிநாதன், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய தலைவர் பூச்சிமுருகன், மாமனிதன் படத்தின் இயக்குனர் சீனு ராமசாமி, நடிகர் விஜய் சேதுபதி, நடிகர் ராஜேஷ், இந்தோ ரஷ்யா மையத்தின் அதிகாரிகள் பங்கேற்றனர்.

https://youtu.be/KD-JvAP3MfQஇதில் பேசிய இயக்குனர் சீனுராமசாமி, மாமனிதன் படம், திரையரங்குகளில் சரியான தருணத்தில் ரிலீஸ் செய்யப்படவில்லை என வருத்தம் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்