கல்குவாரியில் மிதந்த கயிறு கட்டிய உடல்... அணிந்திருந்த டீ-சர்ட்டில் எழுதியிருந்த வாசகம் - குழப்பத்தில் போலீஸ்

x

குஜிலியம்பாறை அருகே கரிக்காலியில் செயல்பட்டு வரும் தனியார் சிமெண்ட் ஆலைக்கு சொந்தமான கல்குவாரியில், உடலில் கயிறுகள் கட்டப்பட்ட நிலையில், ஆண் சடலம் ஒன்று மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர், கல்குவாரியில் மிதந்து கொண்டிருந்த 30 வயதுடைய இளைஞரின் உடலை மீட்டனர். அழுகிய நிலையில் உடல் மீட்கப்பட்டதால், ஒரு வாரத்திற்கு முன்பாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் உறுதிப்படுத்தினர். உயிரிழந்த இளைஞரின் விவரம் அறிய முடியாத நிலையில், அவர் அணிந்திருந்த ஆடையில், ராம் பாய்ஸ் கபடி குழு காங்கயம் என எழுதப்பட்டிருந்தது. பின்னர் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட உடலை, உடற்கூறு ஆய்வுக்காக போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்