"கூலுக்கும் ஆசை.. மீசைக்கும் ஆசையா?" மனைவியை அறுத்து கொன்ற கணவன்

x

திண்டுக்கல் மாவட்டம், பூத்தாம்பட்டி அருகே மனைவியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு தப்பியோடிய கணவரை போலீசார் தேடி வருகின்றனர். வேறு பெண்ணுடன் தொடர்பில் இருந்த கணவர் ராஜசேகரை மனைவி தேவி தட்டிக் கேட்டதால் இருவருக்கும் இடையே தகராறு இருந்து வந்தது. 2 மாதங்களுக்கு முன் மகன்களை அழைத்துக் கொண்டு அரண்மனையூரில் உள்ள தாய் வீட்டுக்குச் சென்றுவிட்ட தேவியிடம், ராஜசேகர் சென்று தகராறு செய்துள்ளார். அப்போது, கத்தியால் தேவியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்து இட்டு, அவர் தப்பியோடி விட்டார். இதையடுத்து, அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.


Next Story

மேலும் செய்திகள்