14 வயது சிறுமியை கடத்திச் சென்று மகனுக்கு திருமணம் செய்து வைத்த உறவினர்... விரக்தியில் தீக்குளித்த தாய் - திண்டுக்கல்லில் அதிர்ச்சி

x
  • திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே, 14 வயது மகளை கடத்திச் சென்று திருமணம் செய்த விரக்தியில், தாய் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.
  • குஜிலியம்பாறை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், கணவர் பிரிந்து சென்ற நிலையில், தனது 14 வயது மகளுடன் வசித்து வந்தார்.
  • முத்தம்பட்டு பகுதியை சேர்ந்த உறவினரான பாண்டியன் என்பவர், 14 வயது சிறுமியை கடத்திச் சென்று தனது மகன் அருண் குமாருக்கு திருமணம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது.
  • இது தொடர்பாக, வடமதுரை காவல் நிலையில் தாயார் புகார் அளித்தார். பின்னர், மகள் பிரிந்து சென்ற விரக்தியில் இருந்த தாயார், உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார்.
  • உடனடியாக அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர், மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
  • இதனிடையே, சிறுமியை கடத்திய சிவசக்தி, ராஜம்மாள் ஆகியோரை கைது செய்த வடமதுரை போலீசார், தலைமறைவாக உள்ள மூன்று பேரை தேடி வருகின்றனர்.
  • மேலும், சிறுமியை மீட்ட போலீசார், திண்டுக்கல்லில் உள்ள காப்பகத்தில் சேர்த்தனர்.

Next Story

மேலும் செய்திகள்