நீச்சல் தெரியாமல் உயிரை விட்ட இரண்டு 6ம் வகுப்பு மாணவர்கள் - கதறும் பெற்றோர்

நீச்சல் தெரியாமல் உயிரை விட்ட இரண்டு 6ம் வகுப்பு மாணவர்கள் - கதறும் பெற்றோர்
Published on

திண்டுக்கல் அருகே ஆற்றில் குளிக்கச் சென்ற 2 பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் மனோஜ் மற்றும் திருமுருகன். இவர்கள் இருவரும் ஆறாம் வகுப்பு படித்து வந்தனர்.

இருவரும் அருகேயுள்ள குடகனாற்றில் குளிப்பதற்காக இறங்கிய போது, இருவருக்கும் நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

சிறுவர்களின் உடல்கள் கைப்பற்றப்பட்டு உடற்கூராய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com