நூல் வெளியீட்டு விழா... லியோனிக்கு புகழாரம் சூட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

x
  • லியோனியின் பேச்சும், எழுத்தும் சுவையானது என்றும், தனது நகைச்சுவை பேச்சால் அனைவரையும் வசப்படுத்த கூடிய ஆற்றல் அவருக்கு உண்டு என்பதால், அவரை நாவரசர் என்று சொல்லலாம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
  • திண்டுக்கல் லியோனி எழுதிய "வளர்ந்த கதை சொல்லவா" என்ற நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
  • இதில் பங்கேற்று நூலை வெளியிட்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், லியோனி கால் நூற்றாண்டு காலமாக மேடையில் பேசி, பகுத்தறிவு கருத்துக்களை பரப்பி மக்களை சிந்திக்க வைப்பதாக கூறினார்.
  • அதிமுக ஆட்சி நடந்த போது ஓராண்டு காலத்தில் ஆறு புத்தகங்கள் மட்டுமே வெளிடப்பட்டுள்ளதாகவும், ஆனால், லியோனி பாடநூல் கழக தலைவராக பதவி ஏற்றபின் கடந்த இரண்டு ஆண்டுகளில் 120 புத்தகங்கள் வெளியிடப்பட்டு, அதில் வெற்றி பெற்றிருக்கிறார் என்று கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்