ராக்கெட்ரி படத்திற்காக வீட்டை இழந்தேனா?... ரசிகரின் பதிவுக்கு நடிகர் மாதவன் மறுப்பு

x

ராக்கெட்ரி படத்திற்காக தான் வீட்டை இழக்கவில்லை என நடிகர் மாதவன் விளக்கம் அளித்துள்ளார். மாதவன் இயக்கி நடித்த ராக்கெட்ரி படம் அண்மையில் வெளியாகி நல்ல வசூலை ஈட்டியது. எனினும் இந்த படத்தை உருவாக்க தனது வீட்டையே மாதவன் இழந்ததாக ரசிகர் ஒருவர் கருத்து பதிவிட்டார். இதற்கு விளக்கமளித்த மாதவன், தனது தியாகத்தை மிகைப்படுத்த வேண்டாம் எனவும், கடவுளின் அருளால் படத்தின் மூலம் நல்ல லாபம் கிடைத்ததாக தெரிவித்தார். இதனால் இந்த ஆண்டு கூடுதலாக வரி செலுத்த வேண்டியிருக்கும் எனவும் மாதவன் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்