சிஎஸ்கே கோட்டையில் ஹைதராபாத்துக்கு ஆட்டம் காட்டி விட்ட தோனி அணி...தோனியின் விக்கெட்டுகள்....!

x
  • சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பவுலிங்கை தேர்வு செய்தார்.
  • பின்னர் பேட்டிங்கை தொடங்கிய ஹைதராபாத் அணியில் தொடக்க வீரர்கள் ஹாரி ப்ரூக் 18 ரன்களுக்கும் அபிஷேக் சர்மா 34 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.
  • ஹைதராபாத் மிடில் ஆர்டர் வீரர்கள் மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்த 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 134 ரன்களை மட்டுமே ஹைதராபாத் எடுத்தது.
  • சென்னை தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஜடேஜா 3 விக்கெட்டுகளை சாய்த்தார். கேப்டன் தோனி ஒரு கேட்ச், ஒரு ஸ்டம்பிங் மற்றும் ரன் அவுட் செய்து ரசிகர்களை மகிழ்வித்தார்.
  • பின்னர் 135 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணியில் ருதுராஜ் கெய்க்வாட், கான்வே தொடக்க ஜோடி சிறப்பாக விளையாடி முதல் விக்கெட்டுக்கு 87 ரன்கள் சேர்த்தது.
  • கான்வே அரைசதம் அடித்து அசத்த, ருதுராஜ் கெய்க்வாட் 35 ரன்களில் ரன் அவுட் ஆனார்.
  • இறுதியில் 18 புள்ளி 4 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்த சென்னை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.
  • தொடக்க வீரர் கான்வே 77 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்

Next Story

மேலும் செய்திகள்