என் கிரிக்கெட் வாழ்வின் கடைசிக் கட்டம்" ஐபிஎல்-லில் இருந்து விடைபெறுகிறாரா தோனி? உருக்கமான பேச்சு..நெஞ்சம் கலங்கிய ரசிகர்கள்

x
  • மகேந்திர சிங் தோனி.. கிரிக்கெட் உலகின் சகாப்தம்... ரசிகர்களின் உணர்வோடு கலந்த மாமனிதன்... அவர் ஏந்தாத கோப்பைகள் இல்லை.. எட்டாத உயரங்கள் இல்லை...
  • மன திடத்தின் உதாரணமாய் ரசிகர்களின் மனங்களில் அரியாசனம் போட்டமர்ந்திருக்கும் தோனி, எல்லாவற்றையும் கடந்து தனது கேரியரின் அஸ்தமனத்திற்கு ஆயத்தமாகி வருகிறார். ஆம்... ஓய்வுக்கான சமிக்ஞைகளை தோனி வழங்க ஆரம்பித்துவிட்டார்.
  • 2020ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வு பெற்ற பிறகு, ஐபிஎல்லிலும் அவர் ஓய்வு பெற்று விடுவார் போன்ற கருத்துகள் ரெக்கை கட்டிப் பறந்தன.
  • ஓய்வு குறித்து அவரிடம் அப்போது கேட்கப்பட்டபோது, Definitely not என பளிச்சென்று பதில் வந்தது. அடுத்த சீசனே தோனி தலைமையில் சென்னை அணி கோப்பையையும் வென்று கம்-பேக் தந்தது. ஆனால் இவையெல்லாம் கடந்த காலம்...
  • நிகழ்காலத்தைப் பார்த்தோம் என்றால் 41 வயதாகும் தோனியின் ஓய்வு முடிவு, இம்முறை Definitely yes ஆக மெய்ப்பித்துப் போவதற்கே வாய்ப்புகள் அதிகம்...
  • ஆம்... ஹைதராபாத் உடனான போட்டியில் வெற்றி பெற்ற பிறகு, தனது ஓய்வு எண்ணத்தை இலைமறை காயாக தோனி உணர்த்திவிட்டார்...
  • என்னுடைய கேரியரின் கடைசிக் கட்டத்தில் இருக்கிறேன்... மகிழ்ச்சியுடன் அனுபவித்து ஆடுவது அவசியம்.. ரசிகர்களின் அன்பு அளவற்றது. நிச்சயம் வயதாகிறது.. அதை சொல்வதற்கு நான் வெட்கப்படவில்லை...
  • நேற்று போட்டி முடிந்த பிறகு தோனி உதிர்த்த வார்த்தைகள் இவை...
  • தனக்கு நிச்சயம் வயதாகிறது என்று கூறி, தான் ஓய்வு பெற வேண்டிய நேரத்தை நெருங்கிக் கொண்டிருப்பதாக சூசகமாக சொல்லி உள்ளார் தோனி...
  • தனது கடைசிப் போட்டி சென்னையில் நடக்கும் என தோனி விருப்பம் தெரிவித்ததும், நடப்பு சீசனில் 2 பிளே-ஆஃப் போட்டிகள் சென்னையில் நடைபெற இருப்பதும், ரசிகர்களால் ஜீரணிக்க முடியாத ஒன்றைத்தான் உணர்த்துகிறது.
  • ஆம்... தோனியின் அசகாய சிக்சர்களை, அற்புதமான கேட்ச்சுகளை, மின்னல் வேக ஸ்டம்பிங்குகளை, பிரமிக்க வைக்கும் கேப்டன்ஷிப்பை நிஜத்தில் அல்லாமல் நிழற்படங்களாகவும் காட்சிகளாகவும் காணும் நாட்களை நோக்கி நாம் நகர்ந்து கொண்டிருக்கிறோம்......

Next Story

மேலும் செய்திகள்