அம்மன் கோயில் ஊர்வலத்தின் போது வாகனத்தில் இருந்து வெடித்து சிதறிய பட்டாசு - துடிதுடித்து பலியான சிறுவன் உட்பட ஒருவர்

x

சி.பள்ளிப்பட்டி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவை ஒட்டி, அம்மன் ஊர்வலம் நடைபெற்றது. அப்போது, அலங்கரிங்கப்பட்ட அம்மன் சிலையை, மினிலோடு வாகனத்தில் வைத்து பொதுமக்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். மேலும், பட்டாசு உள்ளிட்ட வெடி பொருட்களும் வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்டன. இதனிடையே, வாண வேடிக்கையின் போது வெடித்த பட்டாசு, மின் கம்பத்தில் பட்டு, வாகனத்தில் விழுந்ததில், அங்கு வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்து சிதறின. இதில், ஏழு வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த ஓட்டுநர் ராகவேந்திரன், நொச்சிப்பட்டியை சேர்ந்த ஆதி ஆகியோர் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், சிசிச்சை பலனின்றி ஓட்டுநர் ராகவேந்திரன் உயிரிழந்தார்.


Next Story

மேலும் செய்திகள்