பாதயாத்திரையை தொடங்கிய தருமபுரம் ஆதீன மடாதிபதி - மரியாதை செய்த முஸ்லீம் ஜமாத்தார்கள்

x

தருமபுரம் ஆதினத்துக்கு சொந்தமான சில தேவஸ்தானங்களுக்கு, வரும் நாட்களில் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதில் பங்கேற்பதற்காக தருமபுரம் ஆதின மடாதிபதி, ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், பாதயாத்திரையை தொடங்கினார். வழிநெடுகிலும் அவருக்கு பொதுமக்கள் பாதபூஜை செய்து வழிபட்டனர். இதைத்தொடர்ந்து, மயிலாடுதுறை தைக்கால் தெரு பள்ளிவாசலில், முஸ்லிம் ஜமாத்தார்கள் சால்வை அணிவித்து, தருமபுரம் ஆதின மடாதிபதிக்கு வரவேற்பு அளித்தனர்


Next Story

மேலும் செய்திகள்