சிக்கும் தனுஷ், சிம்பு.. தடை விதிக்க வாய்ப்பு? - அதிர்ச்சி தகவல்

x

சென்னையில் நடைபெற்ற தயாரிப்பாளர்கள் சங்க பொதுக்கூட்டத்தில், தயாரிப்பாளர்களுக்கு சரியாக ஒத்துழைப்பு வழங்காத நடிகர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதன்படி, விஜய் சேதுபதி பல திரைப்படங்களுக்கு அட்வான்ஸ் வாங்கிவிட்டு நடிக்காமல் உள்ளதாகவும்,

நடிகர் தனுஷ் பிரபல தயாரிப்பாளரிடம் 20 கோடி ரூபாய் அட்வான்ஸ் வாங்கிவிட்டு மூன்று வருடத்திற்கு பிறகு நடிப்பதாக கூறியதாகவும் புகார் அளிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேபோல சிலம்பரசன், விஷால், எஸ்.ஜே சூர்யா மீதும் தயாரிப்பாளர்கள் புகார் அளித்துள்ளதாகவும்,

இவர்கள் ஐந்து பேரும் உரிய விளக்கம் அளிக்காவிட்டால், அவர்கள் மீது தடை விதிக்கும் வகையில் தயாரிப்பாளர் சங்கம் ரெட் கார்டு வழங்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்துடன் நடிகர் சங்க நிர்வாகிகள் விரைவில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


Next Story

மேலும் செய்திகள்