தேவர் தங்க கவசம் - ஈபிஎஸ் - ஒபிஎஸ் பரபரப்பு வாதம் | Thevar Jayanthi | EPS vs OPS | ThanthiTV

x

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு தங்க கவசம் அணிவிக்கும் அதிகாரத்தை பெற, ஈபிஎஸ், ஒபிஎஸ் தரப்பினர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முன் வைத்த வாதங்கள் பற்றி பார்ப்போம்.

உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, ஓபிஎஸ் தரப்பில், அதிமுக கட்சி விதிமுறைகளின் படி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருக்கும் போது தற்காலிக பொருளாளருக்கு எந்த அதிகாரமும் இல்லை என வாதிடப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் சம்பந்தமான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்றும், அதிமுக-வில் தற்காலிக பொது செயலர் நியமனம் செய்யப்பட்டதை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கவில்லை என கூறப்பட்டது. தங்க கவசத்தை தங்களிடம் ஒப்படைக்கவில்லை என்றால் மாவட்ட ஆட்சியர் வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும் ஒபிஎஸ் தரப்பில் வாதிடப்பட்டது. இதே போல், எடப்பாடி பழனிச்சாமி தரப்பில், அதிமுக-வில் 2,190 உறுப்பினர்கள் இணைந்து தற்காலிக பொது செயலரை தேர்வு செய்துள்ளதாக கூறப்பட்டது. உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் தற்காலிக பொது செயலர் தேர்வு, பொதுக்குழு கூட்டம் செல்லும் என சுட்டிக்காட்டப்பட்டது. ஓ.பி.ஸ் தரப்பு தங்க கவசத்தை பெற எந்த அதிகாரமும் இல்லை என்றும் எனவே, சட்டப்படி அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசனிடம் தங்க கவசத்தை ஒப்படைக்க உத்தரவிட வேண்டும்" என ஈபிஎஸ் தரப்பில் வாதிடப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்