கார்த்திகை மாதம் தொடங்கியாச்சு.. ஐயப்பன் கோயில்களில் அதிகாலை முதலே குவிந்த பக்தர்கள்.. | ayyappa

x

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் அருகே வந்த ரயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்ட‌தால், குருவாயூர், தேஜஸ் உள்ளிட்ட ரயில்கள் 2 மணிநேரம் தாமதமாக புறப்பட்டன.

திருச்சி கிராப்பட்டி யார்டில் இருந்து, பராமரிப்பு முடிந்து ஜங்ஷன் நோக்கி ரயில் வந்த‌து. ரயில் நிலையம் அருகே வந்த போது, இரண்டு பெட்டிகள் இருப்புப் பாதையில் இருந்து விலகி தடம் புரண்ட‌து. இதனால், ரயில் போக்குவரத்து உடனடியாக நிறுத்தப்பட்டது. விரைந்து வந்த ரயில்வே ஊழியர்கள் ஜாக்கிகள் மூலம் தடம் புரண்ட பெட்டிகள் மீட்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, குருவாயூர், தேஜஸ் உள்ளிட்ட ரயில்கள் 2 மணி நேர தாமதத்திற்குப் பிறகு இயக்கப்பட்டன. இதனால், ரயில்கள் மற்றும் ரயில் நிலையத்தில் காத்திருந்த பயணிகள் கடும் அவதியடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்